தமிழக அரசியலில் களமிறங்கும் மற்றுமொரு நடிகர் என்ற பெருமை கமல்ஹாசனுக்கு விரைவில் கிடைக்கலாம். வரும் அக்டோபர் மாதம் அவருடைய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தற்போது தகவல் பரவி வருகிறது. இருந்தாலும் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை டுவிட்டரில் எப்போதே ஆரம்பித்துவிட்டேன் என்று கமல்ஹாசன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட ஜாடைமாடையாக அடிக்கடி அரசியல் பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்.கடந்த வாரம் கூட விரைவில் உங்கள் விரலுக்கு வேலை வரலாம், அப்போது தவறாமல் உங்கள் விரல்களை வாக்களிப்பதற்குப் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். சமீபத்தில் சுப்பிரமணிய சாமி கூட கமல்ஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப் போகிறார் என்று சொல்லியிருந்தார். ஆனால், கமல்ஹாசன் தற்போது இருக்கும் எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணத்தில் இல்லை, தனிக் கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில்த்ன் இருக்கிறார் என்கிறார்கள்.
ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களைச் சந்திக்கும் போது எதிர்காலத்தில் அரசியலில் நுழையலாம் என்று ஆரூடமாக சொல்லியிருந்தார். போகிற போக்கைப் பார்த்தால் ரஜினிகாந்திற்கு முன்பாகவே கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Post a Comment