பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது குழந்தையின் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.செரீனாவுக்கும், ரெடிட் சமூக வலைத்தளத்தின் இணை இயக்குநர் அலெக்சிஸ் ஓஹானியனுக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து கர்ப்பமான செரீனா அதன் பின்னர் டென்னிஸ் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி அவருக்கு, பெண் குழந்தை பிறந்தது. 2 வாரங்கள் ஆன நிலையில் தனது குழந்தையுடன் இருக்கும் படத்தை செரீனா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் தனது குழந்தையை ஜூனியர் அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஓஹானியன் என குறிப்பிட்டுள்ளார்
Post a Comment