Ads (728x90)

வியட்நாமில் 'டோக்சுரி' என்ற சக்தி வாய்ந்த புயல் இன்று கரையைக் கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடு வியட்நாம். இங்குள்ள ஹா டிங் மாகாணத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில், 'டோக்சுரி என்ற புயல் மணிக்கு 155 கி.மீ., வேகத்தில் இன்று கரையைக் கடக்கும்' என அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் எச்சரித்துள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புயலால் ஏற்படும் மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்து 47 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக 2,50,000 வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மே முதல் அக்டோபர் வரை ஆண்டுதோறும் வியட்நாம், புயலால் பாதிப்புக்குள்ளாகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget