
நினைத்ததை சாதித்துக் காட்டும் மன உறுதியும், விடாமுயற்சியும் கொண்ட நீங்கள், எப்பொழுதும் எளிய வாழ்க்கையை விரும்புவீர்கள். செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். குருபகவான் 5ம் வீட்டில் நிற்பதால் வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிட்டும். பழைய சொந்த பந்தங்களை சந்திப்பீர்கள். நீண்ட காலப் பிரார்த்தனையை இப்போது நிறைவேற்றுவீர்கள்.
உங்கள் பூர்வ புண்யாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் வாகன வசதிப் பெருகும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். 22ந் தேதி முதல் உங்கள் ராசிநாதனாகி புதன் 4ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களின் தியாக உள்ளத்தைப் புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சூரியன் 4ல் அமர்ந்திருப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.
ராகு 2ம் இடத்திலும், கேது 8லும் தொடர்வதால் பார்வைக் கோளாறு, வீண் விரயங்கள், ஏமாற்றங்கள், பேச்சால் பிரச்னைகள், சிறுசிறு விபத்துகளெல்லாம் வந்து செல்லும். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். முகப்பரு, பசியின்மை நீங்கும். மாணவமாணவிகளே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் அதிகரிக்கும். விளம்பர யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள்.
பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்னைகளும் கட்டுப்பாட்டிற்குள் வரும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். மருந்து, துணி, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! தோட்டப் பயிர்கள் மூலம் லாபம் வரும். வீட்டில் நல்லது நடக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 17, 18, 19, 20, 25, 26, 27, 28, 29 மற்றும் அக்டோபர் 5, 6, 7, 8, 9, 14, 15, 16.
சந்திராஷ்டம தினங்கள்:
செப்டம்பர் 29ம் தேதி இரவு 10.09 மணி முதல் 30மற்றும் அக்டோபர் 1, 2ம் தேதி காலை 8.13 மணி வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
பெருமாளை தரிசித்து வாருங்கள்.
Post a Comment