பாகிஸ்தானில் லாகூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் நவாஸ் வெற்றி பெற்றுள்ளார். பானமா கேட் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பதவியை இழந்தார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலியான நவாஸின் லாகூர் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.அதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் உட்பட 44 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் குல்சூம் நவாஸ் 61,254 வாக்குகள் பெற்று சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நவாஸ் ஷெரீப் தான் மக்களின் பிரதமர் மக்கள் உணர்த்தி உள்ளனர் என்று குல்சூம் கருத்து தெரிவித்துள்ளார். எனினும் இந்த தேர்தலில் மோசடி நடைபெற்று உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Post a Comment