பிரதியமைச்சராக இருந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னா ண்டோ பதவி நீக்கப்பட்டமையானது ஜனாதிபதியின் அதிரடி முடிவாகும். இதுவரை தாமதித்து வந்த விடயம் தற்போது இடம்பெற்றுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்து வெளியிடுகையிலேயே இணை அமைச்சரவைப் பேச்சாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அருந்திக்க பெர்னாண்டோ பிரதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் விடயத் தில் ஜனாதிபதி அதிரடி நடவடிக்கையை எடுத் துள்ளார் என்று கூறலாம் என்றார். செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பி டுகையில்,
அருந்திக்க பெர்னாண்டோ தொடர்ச்சியாக அரசாங்கத்தின் கூட்டுப்பொறுப்பை மீறும் வகையில் கருத்து வெளியிட்டு வந்தார். எனவே அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது. அவருக்கு இதுதொடர்பில் நாம் பல தடவை எடுத்துக்கூறினோம். ஆனால் அவர் தொடர்ந்து இந்த அசௌகரியமான செயற்பாட் டில் ஈடுபட்டு வந்தார். எனவே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அவர் கட்சியில் இருந்து தொடர்ந்து செயற்பாடுகளை மேற்கொள்வார். அவர் இன்றுகாலை (நேற்று) ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கேள்வி: செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது.
பதில்: இதில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப் பட்டன. கட்சியை கிராமமட்டத்தில் கட்டியெழு ப்புவது தொடர்பாக ஆராயப்பட்டது.குழுக்களும் நியமிக்கப்பட்டன என்றார்.
Post a Comment