Ads (728x90)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 5–0 அல்லது 4–1 என வெல்லும் பட்சத்தில், ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி ‘நம்பர்–1‘ இடத்துக்கு முன்னேறலாம்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ஐ.சி.சி., தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் முறையே தென் ஆப்ரிக்கா (119 புள்ளி), ஆஸ்திரேலியா (117), இந்தியா (117) அணிகள் உள்ளன. இப்பட்டியலில் ‘நம்பர்–1’ இடம் பிடிக்கும் வாய்ப்பு இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, வரும் 17ல் சென்னையில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் கோல்கட்டா (செப். 21), இந்துார் (செப். 24), பெங்களூரு (செப். 28), நாக்பூர் (அக். 1) நகரங்களில் நடக்கவுள்ளன.

இத்தொடரின் முடிவில், ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில், விராத் கோஹ்லி வழிநடத்தும் இந்திய அணி ‘நம்பர்–1’ இடம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

★ தொடரை 5–0 என முழுமையாக வென்றால் 122 புள்ளிகளுடன் இந்தியா ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா 113 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு தள்ளப்படும்.

★ தொடரை 4–1 எனக் கைப்பற்றினால் 120 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தை பிடிக்கும். ஆஸ்திரேலியா 114 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்படும்.

★ மாறாக, 3–2 என தொடரை வென்றால், 118 புள்ளிகளுடன் இந்திய அணி 2வது இடத்துக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்படும்.

ஆஸி.,க்கு வாய்ப்பு
ஒருவேளை ஆஸ்திரேலிய அணி 5–0 என தொடரை கைப்பற்றினால், 122 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறும். இந்தியா 112 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு தள்ளப்படும்.

★ தொடரை 4–1 என வென்றால், 120 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தை பிடிக்கும். இந்தியா 114 புள்ளிகளுடன் 3வது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும்.

★ மாறாக, 3–2 என தொடரை கைப்பற்றினால், தென் ஆப்ரிக்கா (119 புள்ளி), ஆஸ்திரேலியா (118), இந்தியா (116) அணிகள் முதல் மூன்று இடங்களில் நீடிக்கும்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வருவதால், இந்தியாவுக்கு ‘நம்பர்–1’ வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget