அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹார்வி புயல் புரட்டிப் போட்டது. இதில் இருந்து மக்கள் மீண்டு வராத நிலையில், ப்ளோரிடா மாகாணத்தை இர்மா புயல் பதம் பார்த்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதற்கிடையே, இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 2001, செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது விமானங்களை மோதி தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த துயர சம்பவத்தின் 16வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, உலக வர்த்தக மையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.
Post a Comment