அமெரிக்காவின் புளோரிடாவை புரட்டிப்போட்ட இர்மா புயல் 1ம் பிரிவு புயலாக வலுவிழந்த போதிலும் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. கரீபியன் தீவுகளை புரட்டிப்போட்ட இர்மா புயல் அமெரிக்காவை நோக்கி நகர்ந்தது.புளோரிடா மாகாணத்தில் மணிக்கு 200 கி.மீ் வேகத்தில் காற்று வீசியது. மாகாணத்தின் முக்கிய நகரங்கள் இர்மாவின் பிடியில் இருந்து தப்பமுடியாமல் சிக்கி சேதமடைந்தன. புளோரிடாவை நெருங்கும்போது பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய 4ம் பிரிவு புயலாக வலுவடைந்த இர்மா, பின்னர் 1ம் பிரிவு புயலாக வலுவிழந்தது. எனினும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 2 மணியளவில், மணிக்கு 85 மைல் வேகத்தில் காற்று வீசியது. இர்மா வடக்கு புளோரிடா அல்லது தெற்கு ஜார்ஜியாவை நோக்கி நகர்ந்தால் வெப்ப மண்டல புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இர்மா அபாயம் காரணமாக 6 லட்சம் பேர் குடியிருப்புக்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். அமெரிக்க வரலாற்றிலேேய இவ்வளவு எண்ணிக்கையிலான மக்கள் வெளியேற்றப்படுவது இதுதான் முதல் முறையாகும்.
இர்மா தற்போது புளோரிடாவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளதும், அதிக மக்கள் தொகை கொண்டதுமான தம்பா நகரை குறிவைத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நகரின் புவியியல் அமைப்பு மற்றும் கடற்கரையோர பகுதி என்பதால் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
எங்கு பிறந்து, எங்கு வாழ்ந்தாலும் துயரத்தில் கைகோர்க்கும் இந்தியர்
இர்மா புயல் பீதியால் புளோரிடாவில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்கியுள்ளனர். ஏராளமானோர் அட்லா–்ண்டாவில் உள்ள உறவினர்களிடம் தஞ்சம் அடைந்துள்ளனர். 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, துறைமுகம் லாரா மற்றும் தம்பாவை காட்டிலும் மியாமியில் அதிக இந்தியர்கள் வசித்து வருகின்றனர். மியாமியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உள்ளனர். புயலால் பாதித்த இந்தியர்களுக்கு, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள தெலுங்கு சங்கம் சார்பாக 600 இந்தியர்களுக்கு தங்குமிடம், உணவு வழங்கப்படுகிறது. அட்லாண்டாவில் உள்ள இந்து கோயில் சங்கம், இந்திய அமைப்புகள், அட்லாண்டாவின் இந்திய நண்பர்கள் சங்கம், அமெரிக்க சேவா உள்ளிடட அமைப்புகளும் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தங்கும் வசதியும், உணவு வசதியும் செய்து ஆதரவு அளித்து வருகின்றன. எங்கு பிறந்து, எங்கு வாழ்ந்தாலும் துயரத்தில் கைகோர்ப்பதில் இந்தியர்களை மிஞ்சுபவர் யாருமில்லை. அந்த ஒற்றுமையும், பாசப்பிணைப்பும் அமெரிக்காவிலும் எதிரொலிக்கிறது
Post a Comment