இந்த விஜயத்தின்போது ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் சின்சிரோ அபே சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கல் கனடாவின் பிரதமர் டுருடூ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களுடனான சந்திப்புக்கள் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லையாயினும் சந்திப்புக்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதமர்களை சந்திப்பதானது தற்போது உறுதியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் பக்க சந்திப்புக்களாகவே அரசியல் தலைவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்புக்கள் நடைபெறுவுள்ளன.
ஐக்கிய நாடுகள் செயலாளர் அன்டோனியோ கட்ரஸுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பயணிப்பது குறித்து ஆராயவுள்ளார். அத்துடன் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் அபிவிருத்தி உதவி திட்டங்கள் தொடர்பாகவும் பேசப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அரச தலைவர்களுக்கு வழங்கும் மதிபோசன விருந்துபசாரத்திலும் பங்கேற்பார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.
இந்த உரையின்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் போன்றவை தொடர்பாக உலகநாடுகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவிருக்கிறார்.
மேலும் முதற்தடவையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். உலக நாடுகளின் அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி வழங்கும் இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி பங்கேற்பார்
Post a Comment