அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் தலா 117 தரப்புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்திரேலியா (5,505) 2ஆவது இடத்திலும், இந்தியா (5,266) 3ஆவது இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில், இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முடிவைப் பொறுத்து தரவரிசையில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இந்த தொடரை இந்தியா 4-–1 என்ற கணக்கில் கைப்பற்றும் பட்சத்தில், முதலிடத்தைப் பெறும். அதே சமயம் 3-–2 என்ற கணக்கில் வென்றால் 2ஆவது இடத்துக்கு முன்னேறலாம். அவுஸ்திரேலிய அணி 5–0 அல்லது 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால், அந்த அணி முதலிடத்துக்கு முன்னேற முடியும்.
Post a Comment