Ads (728x90)

விஜய் மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் மெர்சல். அட்லி இயக்கி வரும் இந்த படத்தில் காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, கோவை சரளா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் பெப்ஸி ஸ்டிரைக் காரணமாக தாமதமாகி வந்த நிலையில், தற்போது மறுபடியும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. அதோடு, சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள் சில காட்சிகளையும் நேற்று முன்தினம் முதல் படமாக்கி வருகிறார் அட்லி.

இந்த படத்தில் முதன்முறையாக வடிவேலுவை முழு குணசித்ர நடிகராக்கியிருக்கிறார் அட்லி. இதற்கு முன்பு சில படங்களில் அவர் குணசித்ர ரோலில் நடித்திருந்தபோதும் அதில் காமெடி காட்சிகளும் கலந்திருந்தன. ஆனால் இந்த படத்தைப்பொறுத்தவரை அப்பா வேடத்தில் நடித்துள்ள விஜய்க்கு அண்ணனாக வடிவேலுவும், அண்ணியாக கோவை சரளாவும் நடித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய், வடிவேலு சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் காட்சிகளும் நிறைய உள்ளதாம். ஆக, இதற்கு முன்பு விஜய்யுடன் நடித்த படங்களில் காமெடியனாக மட்டுமே நடித்து வந்த வடிவேலு, முதன்முறையாக இந்த மெர்சல் படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்திருக்கிறார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget