Ads (728x90)

மாலபே சைட்டம் மருத்­துவ கல்­லூ­ரிக்கு எதி­ராக ஐந்து மாந­க­ரங்­களில் இருந்து ஆரம்­பிக்­கப்­பட்ட வாகன பேரணி இன்று வெள்­ளிக்­கி­ழமை கொழும்­பை வந்தடையவுள்­ளது. இந்த வாகன பேர­ணியில் பெருந்­தொ­கை­யான மாண­வர்கள் கொட்டும் மழை என்றும் பாராமல் பேர­ணியை தொடர்ந்த வண்ணம் உள்­ளனர். இந்த பேர­ணியை அகில இலங்கை பல்­க­லை­க்க­ழக மாணவர் ஒன்­றியம் முன்னெடுத்துள்­ளது. 
இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, மாலபே சைட்டம் மருத்­துவ கல்­லூ­ரியை மூடு­மாறு வலி­யு­றுத்தி ஒரு வரு­டத்­திற்கும் மேலாக போராட்டம் நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. இது­வரை பல முறை கொழும்பு நகரை மையாக கொண்டு ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இதற்கு அப்பால் நாட்டின் பல பாகங்­க­ளிலும் ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டன. மேலும் வைத்­தி­யர்­க­ளினால் வைத்­தி­ய­சா­லை­களில் பல தட­வைகள் வேலை­நி­றுத்தப் போராட்­டங்­க­ளும் நடத்தப்பட்டன.
இந்­நி­லையில் பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்­தினால் கடந்த செவ்­வாய்­க்கி­ழமை பிர­தான நக­ரங்­களில் இருந்து கொழும்பு நோக்கி வாகன பேரணி ஏற்­பாடு செய்­யப்­பட்­டிருந்தது. நேற்­றைய தினம் குறித்த வாகன பேரணி கொழும்பு நகரை அண்டியிருந்தது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை குறித்த வாகன பேரணி கொழும்பு நகரை வந்தடையவுள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget