Ads (728x90)

சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன்ராஜா இயக்கிவரும் வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நிலவிவருவதாக படத்துறையில் பரபரப்பாக தகவல் பரவிவருகிறது. ஏற்கனவே பல தேதிகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளி வைக்கப்பட்டு கடைசியாக, டிசம்பர் 22-ஆம் தேதி வேலைக்காரன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி 2018 பொங்கலுக்குத்தான் படம் வெளியாகும், அதுவும் வேலைக்காரன்-1 என்ற பெயரில் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

அதன் அர்த்தம்? இரவு பகலாக பலமுறை எடிட் பண்ணியும் வேலைக்காரன் படம் நாலரை மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு நீளமாக இருக்கிறதாம். அது மட்டுமல்ல இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியதாகவும் இருக்கிறதாம்.

இது குறித்து சிவகார்த்திகேயன், மோகன்ராஜா, ஆர்.டி.ராஜா, எடிட்டர் ரூபன் ஆகியோர் கூடிப் பேசிய போது, பாகுபலி படத்தைப் போல் இரண்டு பாகங்களாக வேலைக்காரன் படத்தை ரிலீஸ் செய்தால் என்ன என்றும், 2018 ஜனவரியில், பொங்கல் அன்று வேலைக்காரன்-1 படத்தையும், 2018 ஏப்ரலில் தமிழ்ப்புத்தாண்டு அன்று வேலைக்காரன்-2 படத்தையும் ரிலீஸ் செய்யலாமா என்றும் ஆலோசனை செய்திருக்கிறார்கள். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget