விஜய்சேதுபதியின் 25ஆவது படமாக உருவாகிற படம் - 'சீதக்காதி'. 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இந்தப் படத்தை இயக்குகிறார். அய்யா என்ற நாடக மேடைக் கலைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் 'சீதக்காதி' படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கிறார் விஜய்சேதுபதி. அதாவது, 75 வயது, 50 வயது மற்றும் 30 வயது என மூன்று விதமான வெவ்வேறு வயதுடைய தோற்றங்களில் நடிக்க இருக்கிறார். இவற்றில் 75 வயதுடைய கேரக்டருக்கு ஹாலிவுட் மேக்அப்மேனை பயன்படுத்த உள்ளனர். இதற்காக விரைவில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று ஹாலிவுட் மேக்அப் கலைஞரை சந்திக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.
'மிசஸ் டவுட்பயர்', 'தி க்யூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன்', 'டிராகுலா' போன்ற ஹாலிவுட் படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள கிரேக் கேனம்தான் அவர். ஷாருக்கானின் 'பேன்' மற்றும் 'கபூர் அன்ட் சன்ஸ்' போன்ற ஹிந்தி படங்களுக்கும் மேக்அப் கலைஞராக பணியாற்றியுள்ளார் கிரேக் கேனம்.
Post a Comment