Ads (728x90)

பாரிஜாதம் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் தரண் குமார். இயக்குர் கே.பாக்யராஜின் தூரத்து உறவினர். அதன் பிறகு போடா போடி, என்றென்றும், தகராறு, ஆஹா கல்யாணம், நாய்கள் ஜாக்கிரதை உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தார். தரண் குமாரும், நகர்வலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த தீக்ஷிதாவும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

தற்போது அவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தரண் குமார், தீக்ஷிதா திருமணம் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் எளிய முறையில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இயக்குனர் கே.பாக்யராஜ் குடும்பத்தினருடன் சென்று மணமக்களை வாழ்த்தினார். இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நண்பர்கள், திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget