Ads (728x90)


விவேகம் படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதால் படத்தைப் பற்றிய பேச்சுக்கள் குறைந்துவிட்டன. மிகப் பெரும் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் அஜித் ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றிவிட்டது. கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் படத்தின் வசூல் வார நாட்களை விட நன்றாக இருந்ததாகச் சொல்கிறார்கள். இந்த வாரத்திற்குள் பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் எடுக்கப்பட்டுவிடும். அந்த இடத்தை துப்பறிவாளன், மகளிர் மட்டும் படங்கள் நிரப்பிவிடும்.

விவேகம் படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதில் படத்தின் டீசருக்குப் பெரும் பங்கு உண்டு. யு டியுபில் மே மாதம் வெளியான இப்படத்தின் டீசர் இதுவரை 2 கோடியே 3 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. 5,54,000 லைக்குகளும் கிடைத்துள்ளன. இன்னும் 17000 லைக்குகள் மட்டும் கிடைத்தால் உலக அளவில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்ற சாதனை புரிந்து நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புள்ளது.

ஸ்டார் வார்1 - தி லாஸ்ட் ஜெடி டீசர் 5,71,000 லைக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையைக் கடக்க வேண்டுமானால் விவேகம் டீசருக்கு இன்னும் 17000 லைக்குகள் கிடைத்தால் போதும். விவேகம் படத்தின் பரபரப்பை மறப்பதற்குள் அஜித் ரசிகர்கள் இந்த லைக்குகளைச் செய்தால் ஒரு தமிழ்ப் படத்திற்கு, அஜித் படத்திற்கு உலக சாதனை புரியும் வாய்ப்பு கிடைக்கும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget