தமிழில், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை அடுத்து நரகாசுரன் படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. தெலுங்கில் கவுதமி புத்ர சட்டகர்னி, நக்சத்ரம் படங்களை அடுத்து பைசா வசூல், வீர போக வசந்த ராயலு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பிரகாசம் பிரதுன்ன பெண்குட்டி என்ற படத்திலும் நடிக்கிறார். ஆக, பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் ஸ்ரேயா.இந்த நிலையில், தெலுங்கில் அவர் தற்போது நடித்து வரும் வீர போக வசந்த ராயலு படத்தில் இதுவரையில்லாத வகையில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் ஸ்ரேயா.
நேற்று ஸ்ரேயாவின் பிறந்த நாள் என்பதால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில், ஸ்ரேயாவை மாறுபட்ட தோற்றத்தில் சித்தரிக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
Post a Comment