
இந்த நிலையில் அதிபர் அஷ்ரப் கனியுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் வந்தார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவரது அமைச்சரவை உறுப்பினர் ஆப்கன் வருவது இதுவே முதல் முறை. மேட்டிசுடன் நேட்டோ படைத் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்கும் வந்திருந்தார்.
அவர்கள் வந்த அடுத்த சில மணி நேரங்களில் காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே 6 ராக்கெட்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ பிரிவு அருகே நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த நிலையில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தாக்குதல் காரணமாக விமான நிலையத்தில் போக்குவரத்து எதுவும் ரத்து செய்யப்படவில்லை
Post a Comment