
புறக்கோட்டை, குமார வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பதினாறு கடைகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகின. அதிகாலை வேளை என்பதால், ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதனாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு நகர சபைக்குச் சொந்தமான பதினாறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறக்கப்பட்டன.
விபத்துக்கான காரணம் குறித்து புறக்கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment