Ads (728x90)

வியாழன், செப்டம்பர் 21, 2017, 

புரட்டாசி 5, ஹேவிளம்பி வருடம்

நல்ல நேரம் -                       9-12, 4-7, 8-9
எமகண்டம்   -                      காலை மணி 6.00-7.30

இராகு காலம் -                   மதியம் மணி 1.30-3.00

மேஷம்: குடும்ப சிரமம் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவை ப்பணி நிறைவேற்றுவது நல்லது. சுமாரான வருமானம் கிடைக்கும். வெளியூர் பயண த்தில் திடீர் மாற்றம் உண்டாகும். நண்பரால் உதவி உண்டு.

ரிஷபம்: நண்பர்களால் பிரச்னைக்கு ஆளாகலாம். தொழில் வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.

மிதுனம்: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளி க்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற வாய்ப்பு உண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கடகம்: முக்கியப்பணி நிறைவேற அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் கண வரின் அன்பை பெறுவர். அரசுவகையில் நன்மை உண்டாகும்

சிம்மம்: எதிர்பாராத வகையில் திடீர் செலவு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் கடின உழை ப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சமாளிக்க திணறுவர். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.

கன்னி: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் நட்புடன் பழகுவர். உடல்நலனில் கவனம் தேவை. நண்பரால் உதவி கிடைக்கும்.

துலாம்: திறமையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். உறவினர்களிடமிருந்து சுபசெய்தி வந்து சேரும்.

விருச்சிகம்: உங்களின் செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய விடாமுயற்சி தேவை. லாபம் சுமார். பெண்களுக்கு செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

தனுசு: சமயோசிதமாக செயல்பட்டு வளர்ச்சியடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் விருந்து விழாவில் கலந்து கொள் வர். சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகரம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் பிள்ளைகளால் சிரமத்திற்கு ஆளாகலாம். அலைச்சலால் உடல் அசதி ஏற்படலாம்.

கும்பம்: குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அபரி மிதமான வளர்ச்சி ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மீனம்: நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். ஆரோக்கியம் மேம்படும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget