பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையோடு முடியப்போகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் டைட்டில் ஜெயித்தால் எப்படி ரியாக்ட் செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது.சினேகன் வழக்கம்போல அழுகையுடன் உணர்ச்சிவசப்பட்டு ரசிகர்கள் தந்த ஆதரவிற்கு நன்றி என்றார். இந்த பணத்தை வைத்து நான் ஏற்கனவே சொன்னது போல 100 கிராமங்களுக்கு பொதுவான நூலகம் ஒன்றை கட்டுவேன் கமல் தான் திறந்து வைக்க வேண்டும் என்றார்.
ஹரீஸ் தரையில் எல்லாம் உருண்டு புரண்டு மற்றவர்களை கட்டிப்பிடித்து விட்டு என்னை இத்தனை வாழ வைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி என்று கூறினார்.
பிந்து மாதவி பேசும்போது, அவரிடம் கொடுத்த பாத்ரூம் பிரஷை கையில் அவார்டு போல வைத்துக்கொண்டு, இந்த விருதை என்றுடைய ஹீரோ, இயக்குனர், ஒளிப்பதிவாளர், இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என்றார். ஆரவ் பிந்துவிடம் வந்து இது படம் இல்லை, பிக்பாஸ் வீடு என்று கூறி கலாய்த்தார். ஆனால் பிந்து மாதவி எவிக்ட் செய்யப்பட்டார்.
ஆரவ் பேசும் போது, இந்த வெற்றியில் கிடைத்த பணத்தை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தான் செலவு செய்வேன் என்றார்.
கணேஷ் பேசும் போது, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு கிடைத்த முக்கியமான விஷயமே மக்களின் அன்பு தான். இதற்காகத்தான் இங்கே கலந்து கொண்டேன் என்றார்.
Post a Comment