Ads (728x90)

லண்டனின் பார்சன்ஸ் க்றீன் சுரங்க ரயில் நிலையத்தில் சற்று முன்னர் நிகழ்ந்த வெடிவிபத்தில் பயணிகள் காயமடைந்ததாக தெரியவருகிறது மாவட்டங்களுக்கி இடையிலான ரயிலின் கடைசிப் பெட்டியில் இருந்த வெள்ளை நிறக் கொள்கலன் ஒன்று வெடித்ததிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில், பயணிகள் சிலர் முகத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர். இது பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து உடனடியாகத் தெரிவிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget