
இங்கிலாந்து அணியுடன் நடந்த டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 21 ரன் வித்தியாசத்தில் வென்றது. செஸ்டர் லி ஸ்ட்ரீட், ரிவர்சைடு மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. கிறிஸ் கேல் 40 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), எவின் லூயிஸ் 51 ரன் (28 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), பாவெல் 28 ரன் விளாசினர்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 19.3 ஓவரில் 155 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹேல்ஸ் 43, பட்லர் 30, பேர்ஸ்டோ 27, பிளங்கெட் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். வெஸ்ட் இண்டீஸ் 21 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி மான்செஸ்டரில் நாளை நடைபெறுகிறது
Post a Comment