Ads (728x90)

கொரியா ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். கால் இறுதியில் ஜப்பான் வீராங்கனை மினாட்சு மிடானியுடன் நேற்று மோதிய சிந்து, கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டில் 21-19 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.

இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த மிடானி 21-16 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். கடைசி செட் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-19, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி ஒரு மணி, 3 நிமிடத்துக்கு நீடித்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா 22-20, 10-21, 13-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் சன் வானிடம் போராடி தோற்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget