இந்திய அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணியில், காயத்தால் அவதிப்பட்டு வரும் அதிரடி தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச்சுக்கு மாற்றாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா வந்துள்ள ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில், கெண்டைக்கால் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் ஓரிரு போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு மாற்றாக பேட்ஸ்மேன் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டுள்ளார். பிஞ்ச், தொடர்ந்து அணியினருடன் தங்கி இருப்பார் என்றும், அவரது காயம் குணமாவதை பொறுத்து கடைசி கட்ட போட்டிகளில் இடம் பெறுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகி தெரிவித்துள்ளார்.
Post a Comment