பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட இலங்கையின் 11 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.ஐ.பி.எல். தொடர் போல் பங்களாதேஷிலும் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது.
இதில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தலைமையிலான டாக்கா டைனமைட்ஸ் அணி கடந்த முறை சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தது.
இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் மேலும் 11 வீரர்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
அதன்படி ரங்பூர் ரைடர்ஸ் அணியில் திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குமார் சங்கக்கார டாக்கா டைனமைட்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜீவன் மெண்டிஸ் மற்றும் டில்ஷான் முனவீரவை சிட்டகொங் வைக்கிங்ஸ் அணி ஏலமெடுத்துள்ளது. அஞ்சலோ மெத்தியூஸ் கொமிலியா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். சீக்குகே பிரசன்ன,
ஷெஹான் ஜயசூரிய ஆகி யோர் குல்னா டைடன்ஸ் அணிக்கும், தசுன் சானக்க, வனிந்து ஹசரங்க, சதுரங்க டி சில்வா ஆகியோர் சில்ஹிட் சிக்ஸர்ஸ் அணிக்கும் ஆடுகின்றனர்.
பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் மொத்தம் 26 இலங்கை வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் 11 பேர் ஏலமெடுக்கப்பட்டுள்ளனர்.
'ஏ' முதல் 'எவ்' வரையிலான தரநிலைகளில் வீரர்கள் ஏலமெடுக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் முதல் 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment