Ads (728x90)


செவ்வாய், செப்டம்பர் 19, 2017, 
புரட்டாசி 3, ஹேவிளம்பி வருடம்

நல்ல நேரம்  -         8-9,   12-1,   7-8
எமகண்டம்   -         காலை மணி      9.00-  10.30
இராகு காலம்  -      மாலை மணி     3.00-  4.30

மேஷம்: உற்சாக மனப்பான்மையுடன் பணியாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு விலகும். லாபம் படிப்படியாக உயரும். கடனில் பெரும்பகுதி அடைபடும். பணி யாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு மறையும்.

ரிஷபம்: சிலரது பேச்சால் சங்கடத்திற்கு ஆளாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைப்பதில் தாமதம் உண் டாகும். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

மிதுனம்: திடீர் அவசரப்பணியால் சிரமப்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டி குறுக்கிடும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் பிள்ளைகளின் வழியில் செலவு செய்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

கடகம்: நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரிடம் பரிசு, பாராட்டு காண்பர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டாகும். நண்பர்களுடன் பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பிள்ளைளின் அன்பைப் பெற்று மகிழ்வீர்கள்.

கன்னி: சிலர் சுயநல எண்ணத்துடன் நெருங்கிப் பழகுவர். தொழில் வியாபாரத்தில் உழைப்புக் கேற்ப லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து ஓரளவு விடுபடுவர். பெண் கள் நகை, பணம் இரவல் கொடுக்க கூடாது. பெற்றோரின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.

துலாம்: அறிமுகம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் குறுக்கி ட்ட இடையூறு விலகும். வருமானம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இட மாற்றம் கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர்.

விருச்சிகம்: எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். தொழில் வளர்ச்சியால் ஆதாயம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். மாமன், மைத்துனருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். காணாமல் தேடிய பொருள் கை வந்து சேரும்.

தனுசு: நண்பரின் செயலை விமர்சிக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மிதமான வருமா னம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். எதிர்பார்த்த சுப செய்தி தாமத மாகலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்

மகரம்: நேர்மை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். முயற்சி முழு அளவில் வெற்றி பெறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உண்டாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்: யாரிடமும் குடும்பவிஷயத்தைப் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வருமா னம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வர். உறவி னர் வகையில் திடீர் செலவு உண்டாகும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

மீனம்: வாழ்க்கைத்தரம் மேம்படும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். உடல் நிலை பலம் பெறும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget