2018ஆம் ஆண்டு வரவு செலத்திட்டத்தில் வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்த்துக்குமான அமைச்சின் கீழ் 2 ஆயிரம் மில்லியன் ரூபா கருத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது:
2018ம் ஆண்டில் அரச தலைவர் தலைமை அமைச்சரின் ஆலோசனையில் வட- கிழக்குக்கு 50 ஆயிரம் கல்வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புள்ளிகளின் அடிப்படையிலேயே இதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். போரினால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த வீதிகளை சீரமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் யாழ்.மாவட்டத்தில் பல வீதிகளை சீரமைக்கப்படவுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னால் போராளிகள்¸பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்¸ தமிழ் நாட்டிலிருந்து அகதிகளாக வருகைதந்தோர்¸ உள்ளூரில் இடம்பெயர்ந்தோர்¸ வறுமைக்கோட்டுக்குக் கீழ்ப்பட்டோருக்கு தலா 150ஆயிரம் ரூபா பெறுமதியான பொதிகளும் வழங்கப்படவுள்ளது என்றார்.
Post a Comment