
தேசிய தமிழ் மொழித் தின நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் வந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன யாழ். பாடசாலை மாணவர்களுடன் நேற்று சலிக்காமல் ‘செல்பி’ எடுத்தார்.
மாணவர்கள் கூட்டமாக நின்று அரச தலைவருக்குக் கைலாகு கொடுத்து குழுப் படங்களும் எடுத்துக்கொண்டனர்.
தேசிய தமிழ் மொழித் தின விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்வு முடிந்து மண்டபத்தை விட்டு அவர் வெளியே வந்தார். பாடசாலை மாணவர்கள் அவரை வழியனுப்ப இரு வரிசையாக நின்றிருந்தனர்.
அரச தலைவரைக் கண்டதும், ‘சேர் சேர், செல்பி’ என்று கத்தினர். அரச தலைவரும் மாணவர்களுடன் சென்று ‘செல்பி’களை எடுத்துக்கொண்டார்.
அரச தலைவரின் பாதுகாப்பு பிரிவின் கெடுபிடிகளைத் தாண்டியும் மாணவ, மாணவிகள் அரச தலைவரை நெருங்கி தாராளமாக ‘செல்பி’கள் எடுத்தனர்.
சில மாணவர்கள் கூட்டமாக நின்று அரச தலைவருடன் ஒளிப்படமும் எடுத்துக் கொண்டனர். மாணவர்களின் விருப்பத்தை உதாசீனப்படுத்தாமல் அவரும் தாராளமாக நின்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்.
Post a Comment