அந்த அளவிற்கு அஜித் திரையில் வந்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் ரசிகர்களை கூட ஒரு செய்தி புலம்பவிட்டது.
அது வேறு ஒன்றுமில்லை அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் தான் மீண்டும் நடிக்கப்போகின்றார் என்பது தான் அந்த செய்தி.
இதை என்னை அறிந்தால், வேதாளம் தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவே உறுதிப்படுத்தினார், பல அஜித் ரசிகர்களும் சிவாவுடன் படம் இணைந்து செய்வது எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால், தொடர்ந்து அவருடனே கூட்டணி வைப்பது எங்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்துள்ளது, மேலும், அஜித் தொடர்ந்து மசாலா படங்களில் தான் நடித்து வருகின்றார்.
அவர் என்னை அறிந்தால் போல் நடிக்க வேண்டும், பல இயக்குனர்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம், இதெல்லாம் அஜித் காதிற்கு செல்லுமா என்று தெரியவில்லை.
இவை எங்கள் ஆதங்கம், மேலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போர் அடித்து விட்டது, மாற்றம் தேவை என பல அஜித் ரசிகர்கள் நேற்று டுவிட்டரில் கூறி வந்தனர். இதுமட்டுமின்றி சிவாவுடன் அஜித் 10 படங்கள் கூட இணைந்து பணியாற்றட்டும், ஆனால், ஒரு படம் கேப் வேண்டும் என்றும் கூறினர்.
அது சரி என்ன தான் ரசிகர்கள் சொன்னாலும், அதை கேட்கும் மனநிலையில் அஜித் இருப்பாரா? ஏனெனில் அவர் எடுப்பது தானே கடைசி முடிவு.
Post a Comment