
குறித்தமேன் முறையீட்டு மனுக்களானது யாழ்.மேல்நீதிமன்ற பதிவாளருக்கு குறித்த இருதரப்பினராலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28 ஆம் திகதி வித்தியா படுகொலை வழக்கில் ட்ரயல் அட்பார் நீதிமன்றம் ஒன்பது சந்தேகநபர்களில் ஏழு பேரை குற்றவாளிகளாக கண்டதுடன் அந்த ஏழு பேருக்கும் மரணதண்டனையும் முப்பதாண்டு கால கடூழியசிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருந்தது. இவ்வாறான நிலையிலேயே தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடானது செய்யப்பட்டுள்ளது.
ஒரு வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட கைதி தனது தீர்ப்புக்கு எதிராக இரண்டு வழிகளில் மேன்முறையீடு செய்வதற்கு உரித்துடையவராவர். அதாவது அவர் தனது சார்பு சட்டத்தரணி ஊடாக மேன்முறையீடு செய்யமுடியும்.
அதேபோன்று தீர்ப்பளிக்கப்பட்ட பின் னர் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாகவும் மேன்முறையீடு செய்ய முடியும்.
இந்த அடிப்படையிலேயே இவ்வழக்கில் ஏழு குற்றவாளிகள் சார்பாகவும் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையான போகம்பரை சிறைச்சாலையின் அத்தியட்சகர் இவர்களுக்கான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்து அதற்கான மனுவினை யாழ்.மேல்நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதேபோன்று குற்றம் நிரூபிக்கப்பட்ட இவ்வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்பட்ட சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் மற்றும் அவரதுச கோதரன் மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி ஆர்.ரகுபதி மேன்முறையீட்டு மனுவினை கடந்த ஒன்பதாம் திகதி மேற்கொண்டிருந்தார். அத்துடன் ஏனைய குற்றவாளிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன் மற்றும் ஜெயதரன் கோகிலன், ஆகியோர் சார்பில் சட்டத்தரணி மகிந்த ஜயவர்த்தன நேற்றையதினம் மேன்முறையீட்டு மனுவினை சமர்ப்பித்திருந்தார்.
இவ்வாறு சமர்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுத்தொடர்பாக இவ் வழக்கின் தீர்ப்பளித்த ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவித்த பின்னர் இவ்வழக்கின் நீதிவான் நீதிமன்ற மூல வழக்கேடுகள் மற்றும் ட்ரயல் அட்பார் நீதிமன்ற வழக்கு விசாரணை வழக்கு ஏடுகள் அடங்கிய அனைத்து ஆவணங்களும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இவ்வழக்கானது ட்ரயல் அட்பார் முறை யில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டதனால் இவ்வழக் கின் மேன்முறையீட்டு விசாரணையானது உயர்நீதிமன்றத்திலேயே மேற்கொள்ள முடி யும் என்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமை யவே இவ்வழக்கின் மேன்முறையீட்டு கோவைகள் அனைத்தும் உயர்நீதிமன்று க்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமையும் குறிப் பிடத்தக்கதாகும்.
Post a Comment