Ads (728x90)


நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரண் இயக்கிய படம் ஆயிரத்தில் இருவர். இந்த படத்திலும் இசையமைப்பாளர் பரத்வாஜ். கூட்டுசெவத்தக்காளை , செந்தட்டிக்காளை என்ற இரட்டை ரோலில் வினய் நடித்துள்ளார். துப்பறிவாளன் வில்லனில் இருந்து மாறுபட்ட ரோல்.

குடும்ப பகை, சொத்து அபகரிப்பு, கள்ளநோட்டு, ஆந்திரா, மதுரை என்று கதை பல இடங்களில் பல வடிவங்களில் பயணிக்கிறது. சகோதரர்கள் வினய் பிரச்னைகளை தீர்த்தார்களா இல்லை திருந்தி வந்தார்களா என்பது மீதிக் கதை.

ஜின்ஸ் போன்றுஆள் மாறாட்டம் செய்யும் இரட்டை வேட ஹீரோ சப்ஜெக்ட் தான் ஆயிரத்தில் இருவர்.. சரண் கொஞ்சம் வித்தியாசமாக திரைக்கதை அமைக்க முயற்சி செய்துள்ளார்.

சாக்லேட் பாய் ஸ்டைலாக வலம் வந்த வினய் இந்த படத்தில் நெல்லை தமிழ் பேசி, வேஷ்டி சட்டை மீசை என்று எதுவுமே இவருக்கு ஒத்துப் போகவில்லை.
சாமுத்திரிகா , ஸ்வஸ்திகா என்று பெங்களுர் மும்பை ஹுரோயின்களை அறிமுகப்படுத்தி உள்ளார் இயக்குநர். பாடலுக்கு கை கொடுத்தவர்கள் படத்துக்கு கை கொடுக்கவில்லை.

சுருட்டு பிடிக்கும் பிக் பாஸ் புகழ் காஜல் வேடமும் அவரை காதலிக்கும் மதுரை ரவுடியாக அருள்தாஸ் மற்றும் அடியாட்கள் கூட்டமும் படத்தின் காமெடிக்கு கொஞ்சம் கை கொடுத்துள்ளனர்.

வழக்கமாக சரண் பரத்வாஜ் பாடல் கூட்டணி சிறப்பாக அமையும். இந்த படத்தில் அந்த சிறப்பு இல்லை.

இரட்டை வேடம் என்பதால் ஒளிப்பதிவாளருக்கு தான் அதிக சவால்கள் இருக்கும். ஆனால் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கிருஷ்ண ரமணன், பாடல் காட்சிகளுக்கு மெனக்கெட்ட வகையில் படத்திற்கும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

ஆக்ஷன் அதிரடியாக படம் தொடங்கி கடைசியில் காமெடி டிராக்குக்கே முடித்துள்ளார் இயக்குநர்.

வழக்கமாக சரண் படம் என்றால் காதல் அமர்க்களமாக இருக்கும். இந்த படத்தில் பல கிளைக் கதைகள் நிரப்பி காதல் குறைத்து காமெடியை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் சரண் .

Post a Comment

Recent News

Recent Posts Widget