வல்லதேசம்
தமிழில் பம்பாய், விஸ்வரூபம் போன்ற தீவிரவாதத்தை சொன்ன படங்கள் வெளிவந்திருக்கிறது. அந்த வரிசையில் வந்த படம் தான் வல்லதேசம்.
இந்த படத்தில் ஹீரோ ஹீரோயின் எல்லாமே அனுஹாசன் தான். படத்தில் நமக்கு தெரிந்த முகங்கள் என்றால் அனு மற்றும் நாசர் தான். மற்றபடி படத்தில் நடித்த அத்தனை லண்டன் மக்கள் தான்.
கதை லண்டனில் பரபரப்பாக தொடங்குகிறது. தன் அன்பான கணவர் அழகான குழந்தை என்று குருவி கூடைப் போல் வாழ்ந்து வரும் வாழ்க்கையில் அனுவை மர்ம நபர்கள் சிலர் பின் தொடர கதை வேகம் எடுக்கிறது. அனுவின் கண் முன்னே தன் கணவர் கொலை செய்யபடுவதும், தன் குழந்தையை கடத்தப்படுவதும், இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுடன் சுய நினைவு இழக்கும் அனுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கின்றனர். அங்கே குணமாகி நினைவு திரும்பி தன் மகளை தேட ஆரம்பிக்கிறார். அனு யார் இவரை பழிவாங்க காரணம் என்று பிளாஷ்பேக் விரிகிறது.
அனு இந்திய ராணுவ அதிகாரி என்றும். அவரின் முதன்மை அதிகாரி நாசரின் ரகசிய அனுமதியுடன் இந்தியாவை அழிக்க திட்டம் போட்ட தீவிரவாத கும்பலை கண்டுபிடிக்க தான் குடும்பத்துடன் லண்டன் வந்து செட்டில் ஆனது தெரிய வருகிறது.
குழந்தை மீது கொண்ட தாய்ப் பாசமும். நாட்டை தீவிரவாத முயற்சிகளில் இருந்து காப்பாற்ற எடுத்துக் கொள்ளும் முயற்சியிலும் தன் நேர்த்தியான நடிப்பை அனு வெளிப்படுத்துகிறார். அதேசமயம் நாம் கொன்றது தவறான நபர், அவரது மனைவி தான் டார்கெட் என்று எதிர் கோஷ்டி அடுத்த கட்ட பழிவாங்கலுக்கு செல்ல, எப்படி அந்த தீவிரவாத கும்பல் தலைவனை அனு பிடிக்கிறார் என்பதே மீதி கதை
ஹீரோயினை மையப்படுத்தி பல கதைகள் சமீபகாலமாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை பொறுத்த வரை ஹீரோயின் கையில் துப்பாக்கி கொடுத்து வித்யாசப்படுத்தி உள்ளார் இயக்குநர் நந்தா.
அனுஹாசனை பொறுத்தவரை முழு படத்தையும் தோளில் சுமந்தபடி ஓடுகிறார். மனைவியாக, தாயாக, தாய்நாட்டு பற்று உடையவராக தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளார.
படத்தில் ப்ளஸ் பரந்து விரிந்த கட்டடங்களை அழகாக காட்சிபடுத்திய ஒளிப்பதிவு. மற்றும் பின்னணி இசை.
மைனஸ் : படத்தில் அதிகம் தமிழ் நடிகர்கள் இல்லாதது. திரைக்கதையில் ஆரம்பத்தில் தொடங்கிய வேகம் குறைந்து தொய்வாக போகிறது. இது லண்டனில் எடுக்கப்பட்ட ஓர் தமிழ்படம் வல்லதேசம்.
Post a Comment