கதை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால்... பேய் நிஜ மனிதர்களோடு வாழ முடியுமா என்பதை மையப்புள்ளியாக வைத்து படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் ஜவஹர்
கதைப்படி, கணவன் - மனைவி குழந்தை நான்கு நண்பர்கள் இந்த வட்டத்துக்குள் ஒரு பேய் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
ஹுரோ சந்தோஷ், ஹீரோயின் ரேஷ்மி மேனன். ஹுரோவுக்கு இலங்கையில் அறிமுகமாகும் நான்கு நண்பர்கள் மொட்டை ராஜேந்திரன், ஜெகன், ஜீவா, பரணி. இவர்கள் ஹீரோவின் சொந்த ஊரான கேரளாவில் தங்குகின்றனர் அங்கு அவர்களுக்கு சில அனுமாஷ்ய விஷயங்கள் சில நடக்கிறது.
அதில் சற்றும் எதிர்பாராமல் ஹீரோவின் மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாக தெரிகிறது. நண்பர்கள் அனைவரும் ஹுரோவின் மனைவியை பேய் பிடித்ததாக உணர்கின்றனர். ஊரும் நண்பர்களும் தன் மனைவியை பேய் என்று சொல்லும்போது தவிக்கிறார் ஹுரோ. மனைவி பேயா? பேயுடன் மனிதர்கள் வாழ முடியுமா என்று இந்த குழப்பத்தை ஜவஹர் எப்படி தீர்க்கிறார் என்பது மீதிக்கதை.
ஹீரோ சந்தோஷ், எல்லா பிரேமிலும் அப்படியே இருக்கிறார். எந்த முக பாவனைகளும் அதிகம் இல்லை.
அவரது மனைவியாக ரேஷ்மி அழகான தேர்வு. ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்துள்ளார்.
படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பகுதி நல்ல காமெடி.பேய் ஓட்டும் சாமியாராக கோவை சரளா வந்ததும் இவரது சத்தம் காதை பிளக்கிறது.
மிரட்டும் இசை மிஸ்ஸிங்.. சத்யா...
ஆப்பிள் விழுவது.. கை நீளுவது.. பேய் அரங்கத்தில் செட், கேரள பசுமை. படகு வீடு .எல்லாம் அற்புதம் அட்டகாசம். கதை இன்னும் பயங்கரமா இருந்திருக்கலாம்.
Post a Comment