Ads (728x90)

2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­ திட்­டத்­திற்கு ஆலோ­ச­னை­க­ளையும் கருத்­து­க­ளையும் பெற்­றுக் கொள்ளும் நோக்­குடன் விசேட குழு­வொன்று நிறு­வப்­பட்­டுள்­ள­தாக நிதி மற்றும் ஊடக அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக நிதி மற்றும் ஊடக அமைச்சு ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

2018ஆம் ஆண்­டுக்­கான வரவு–செல­ வுத்­ திட்டம் அடுத்த மாதம் 9 ஆம் திகதி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன்­படி குறித்த வரவு செல­வுத்­ திட்­டத்தில்  உள்­ள­டக்­கப்­பட வேண்­டிய விட­யங்கள் தொடர்­பான ஆலோ­ச­னை­க­ளையும் கருத்­து­க­ளையும் பெற்­றுக்­ கொள்­­வ­தற்கு விசேட நிபு­ணத்­து­வத்­து­ட­னான அதி­கா­ரி­களை கொண்ட விசேட குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்படி எதிர் வரும் 15ஆம் திகதி வரைக்கும் கருத்துகள் பெற்று க்கொள்ளப்பட வுள்ளமை குறிப்பிடத் தக்கது.




Post a Comment

Recent News

Recent Posts Widget