ஐதராபாத்தில் நேற்று நடந்த பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடருக்கான 3வது சீசன் வீரர்கள் ஏலத்தில் சென்னை ஸமேஷர்ஸ் அணி நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவை (ரூ.48.75 லட்சம்) தக்கவைத்துக் கொண்டது. சாய்னா நெஹ்வால் (ரூ.41.25 லட்சம், அவாதே வாரியர்ஸ்), கிடாம்பி காந்த் (ரூ.56.10 லட்சம், அவாதே வாரியர்ஸ்) ஆகியோரும் பழைய அணியில் நீடிக்கின்றனர்.இவர்களுக்கு கடந்த ஆண்டை விட 25 சதவீத ஊதியம் அதிகமாக கிடைக்கும். அஷ்வினி பொன்னப்பாவை ரூ.20 லட்சத்துக்கு டெல்லி ஏசர்ஸ் வாங்கியது. முன்னணி வீரர்கள் சாய் பிரனீத் (ரூ.40 லட்சம், ஐதராபாத் ஹன்டர்ஸ்), சமீர் வர்மா (ரூ.52 லட்சம், மும்பை ராக்கெட்ஸ்), எச்.எஸ்.பிரனாய் (ரூ.62 லட்சம், அகமதாபாத்), டியான் ஹுவெய் (ரூ.58 லட்சம், டெல்லி) ஆகியோரை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது.
Post a Comment