
பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 262 ரன்னுக்கு சுருண்டது. அஸார் அலி 59, ஹரிஸ் சோகைல் 56, சமி அஸ்லம் 39, யாசிர் ஷா 24 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இலங்கை பந்துவீச்சில் ஹெராத், தில்ருவன் தலா 3, கமகே, லக்மல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 220 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்திருந்தது.
நேற்று அந்த அணி 96 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாக். பந்துவீச்சில் ரியாஸ் 4, ஹரிஸ் 3, யாசிர் 2, அப்பாஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 317 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 36 ஓவரில் 62 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
Post a Comment