சமீபத்தில் நடைபெற்ற 'விழித்திரு' படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் டி.ராஜேந்தர். தனது பெயரை சொல்ல மறந்துவிட்டார் என்கிற காரணத்திற்காக தன்ஷிகாவிடம், டி.ஆர் நடந்துகொண்ட விதம் பொதுமக்களை மட்டுமல்லாமல், திரையுலகை சேர்ந்தவர்களிடமே அதிருப்தியையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் விஷால் டி.ராஜேந்தருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திரையுலகை சேர்ந்த பலரும் டி.ஆர் மீதான தங்களது விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகை கனிகாவும் தனது பங்கிற்கு டி.ஆரை வறுத்தெடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது,
“இதுநாள் வரை வயதும் அனுபவமும் மன்னிக்கும் தன்மையை கொடுக்கும் என்றுதான் நம்பியிருந்தேன். ஆனால் டி.ஆரின் பக்குவமற்ற செயலை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.. அதிலும் தன்ஷிகாவை அவர் நடத்தியவிதம் இருக்கிறதே.. இத்தனைக்கும் அந்த மேடையில் இருந்தவர்களில் தன்ஷிகா மட்டுமே பெண்.. நீங்கள் ஒருவரின் பெர்சனாலிட்டிக்கு எதிராக மற்றவர்களின் திறமைகளை எடைபோட்டால் நிச்சயம் பர்சனாலிட்டி தான் ஜெயிக்கும். டி.ஆர் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கலாம்.. ஆனால் இரக்க குணமும் மரியாதையும் இல்லாதபோது இத்தனையும் இருந்துதான் என்ன..?
Post a Comment