Ads (728x90)

மலேசியா கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், ரெட் புல் ரேசிங் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (நெதர்லாந்து) சாம்பியன் பட்டம் வென்றார். கோலாலம்பூரில் நேற்று நடந்த விறுவிறுப்பான போட்டியில் வெர்ஸ்டாப்பன் 1 மணி, 30 நிமிடம், 01.290 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார்.

அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தன. மெர்சிடிஸ் அணி நட்சத்திர வீரர் லூயிஸ் ஹாமில்டன் (+12.770 விநாடி, இங்கிலாந்து) 2வது இடமும், ரெட் புல் ரேசிங் அணியின் டேனியல் ரிக்சியார்டோ (+22.519 விநாடி) 3வது இடமும் பிடித்தனர்.

பெராரி அணி நட்சத்திரம் செபாஸ்டியன் வெட்டல் (+37.362 விநாடி) 4வதாக வந்தார். நடப்பு சீசனில் இதுவரை நடந்துள்ள 15 பந்தயங்களின் முடிவில் ஹாமில்டன் 281 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) 247 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், மெர்சிடிஸ் வீரர் வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து, 222) 3வது இடத்திலும் உள்ளனர். அடுத்த பந்தயமான ஜப்பான் கிராண்ட் பிரீ வரும் 6ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget