
சீன ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஸ்பெயினின் கர்லா சுவாரெஸ் நவர்ரோவுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். மற்றொரு முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் கேதரினா சினியகோவாவை (செக்.) வீழ்த்தினார்.
முன்னணி வீராங்கனைகள் மரியா ஷரபோவா, எகடரினா மகரோவா (ரஷ்யா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா (போலந்து), சிமோனா ஹாலெப் (ரோமானியா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
Post a Comment