
வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. இதன் காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. அதன்படி வடகொரியாவின் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஜவுளி, இரும்பு தாது ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐ.நா. தடையை மீறி 4 சரக்கு கப்பல்கள் வடகொரியாவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹக் கிரிபித்ஸ் கூறியதாவது: ஐ.நா. தடையை மீறி பெட்ரோல் 8, ஹோ பேன் 6, டாங் சன், ஜி சைன் ஆகிய 4 கப்பல்கள் வடகொரியாவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளன. குறிப்பிட்ட 4 கப்பல்களை எந்தவொரு நாடும் தங்களது துறைமுகங்களில் நுழைய அனுமதிக்கக்கூடாது. இந்த தடையுத்தரவு கடந்த 5-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Post a Comment