
இதுகுறித்து ரஷ்ய ராணுவ செய்தித் தொடர்பாளர் (செவ்வாய்க்கிழமை) கூறும்போது, “அமெரிக்கா இராக்கில் ஐஎஸ் தீவிராவாதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை குறைத்து கொண்டு, சிரியாவில் ஜிகாதிகளை ரஷ்யா - சிரிய படைகளுக்கு எதிராக சண்டையிட அனுமதிக்கிறது.
அமெரிக்கா ஐஎஸ் தீவிரவாதிகளுடன் சண்டையிடுவதுபோல் பாசாங்கு செய்கிறது. மேலும் ஐஎஸ் தீவிரவாதிகளை சிரியாவுக்கு எதிராக தூண்டுகிறது.
ஈராக்கிலிருந்து வரும் தொடர்ச்சியான தீவிரவாத அச்சுறுத்தல் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையை கேள்விக்குள்ளாக்குகின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் சிரிய அரசு டையர் இசர் நகரை கைப்பற்றியது முதல் இராக்கில் ஐஎஸ்ஸூக்கு எதிராக வான்வழித் தாக்குதலை இராக்கில் அமெரிக்கா குறைத்து கொண்டது” என்றார்.
கிழக்கு பகுதிகளில் ரஷ்ய ஆதரவு சிரிய படைகல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா குற்றச்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment