பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்களை தொடர்ந்து பத்மாவதி என்ற படத்தை இயக்கி உள்ளார். 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சரித்திர பின்னணியில் உருவாகியிருக்கிறது. பத்மாவதியாக தீபிகா படுகோனேவும், அவரது கணவராக ரத்தன் சிங் வேடத்தில் ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜி வேடத்தில் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். பத்மாவதி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் டிரண்ட்டானது. பாலிவுட்டை சேர்ந்த பல திரையுலக பிரபலங்கள் பத்மாவதி டிரைலரை புகழ்ந்து வருகின்றனர். பத்மாவதி படம் டிச., 1-ம் தேதி வெளியாக உள்ளது.
Post a Comment