
தாய்லாந்தில் கடந்த 2011 ஜூலை முதல் 2014 மே மாதம் வரை யிங்லக் ஷினவத்ரா பிரதமராக பதவி வகித்தார். அப்போது அரிசி கொள்முதலில் அவர் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானதால் கடந்த ஆகஸ்ட் இறுதியில் நாட்டைவிட்டு தப்பியோடி விட்டார். அவர் துபையில் தலைமறைவாக வாழ்கிறார் என்றும் அங்கிருந்து கொண்டே பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு நாட்டில் தஞ்சமடைய முயற்சி செய்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே கடந்த செப்டம்பரில் யிங்லக் ஷினவத்ராவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் உதவியை தாய்லாந்து அரசு நாடியுள்ளது. யிங்லக் தொடர்பான முழு விவரங்களை அளிக்குமாறு தாய்லாந்து அரசிடம் இன்டர்போல் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
Post a Comment