
இதுகுறித்து வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோ, ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, "அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்முடன் போருக்கான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். ஐக்கிய நாடுகள் சபையில் வடகொரியவுக்கு எதிரான கருத்துகள், பொருளாதார தடைகள் விதித்து போருக்கான நெருப்பை ட்ரம்ப்தான் உருவாக்கினார். எங்கள் அதிபர் கிம் ஜோங் முன்னரே எச்சரித்திருந்தார் அமெரிக்கா நியாயமாக நடந்து கொள்லவில்லை என்றால் எங்கள் ஆயுதபலத்தில் அமெரிக்கா உலக நாடுகளின் முன் தலைகுனியும் நிலை ஏற்படும்" என்றார்.
முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய அமெரிக்க அதிபர், அணுஆயுத சோதனைகளிலிருந்து வடகொரியா பின்வாங்காவிட்டால் அந்த நாடு அழிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் வியூகம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது: நான் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட அணுகுமுறையை கையாளுகிறேன். அமெரிக்காவுக்கு எது நன்மை தருமோ அதை மட்டுமே செய்வேன். வடகொரியா விவகாரத்தில் அந்த நாட்டின் மீது அமெரிக்கா நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
இதனிடையே வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த தயாராகி வருவது செயற்கைக்கோள் மூலம் உறுதியாகி உள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.
Post a Comment