அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் 3 முதல் 14 வரையில் கிழக்காசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்கிறார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு அதிபர் டொனால்ட் டிரம்ப், முதல் முறையாக கிழக்காசிய நாடுகளான ஜப்பான், தென்கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுக்கு அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் சுற்றுப் பயணம் செய்கிறார்.அப்போது, ஆசிய பசிபிக் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய இருதரப்பு உறவு, பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
வியட்நாமில் நடக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டிலும், பிலிப்பைன்சில் நடக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டிலும் டிமர்ப் கலந்து கொள்கிறார். இந்த பயணப் பட்டியலில் இந்தியா இல்லை. இருப்பினும் இந்தியாவுக்கு டிரம்ப் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், நவம்பர் இறுதியில் ஐதராபாத்தில் நடைபெறும் உலக தொழில் முனைவோர் உச்சி மாநாட்டில், அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா பங்கேற்கிறார். இது, டிரம்ப்பின் இந்திய பயணத்துக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில், டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் டிரம்ப் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது
Post a Comment