
அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்புகளையும் சந்தித்துப் பேசுவார். அத்துடன் அரசாங்கத்துக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார். அதேவேளை, நியாயமற்ற தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவினர் இலங்கைக்கு டிசெம்பர் 4 ஆம் திகதி வரவுள்ளனர். டிசெம்பர் 15ஆம் திகதி வரை இந்தக் குழு இலங்கையில் தங்கியிருக்கும். இந்த இரண்டு பயணங்களையும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் பென் எமர்சன், மோனிகா பின்டோ, ஜூவான் டென்டஸ் ஆகியோர், இலங்கையில் சித்திரவதைகளும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து இடம்பெறுவதாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment