கிராமிய பொருளாதார அமைச்சர் அமீர் அலியின் இணைப்பாளரின் வாகனம் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கோட்டைக்கல்லாற்றில் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அமைச்சரின் இணைப்பாளரின் வாகனம் கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதியும் சிறுவனும் பலத்த காயங்களுக்குள்ளாகி களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதே வேளை அமைச்சரின் இணைப்பாளரின் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளாகவும் குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
Post a Comment