Ads (728x90)


பாலிவுட் ரசிகர்களால் மட்டுமல்லாமல், ஹீரோக்களாலும் மிகவும் விரும்பப்படும் ஹீரோயினாக உருவெடுத்துள்ளார், கத்ரீனா.பாலிவுட்டுக்கு இவர் நடிக்க வந்தபோது, ஹிந்தியில், ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாது. இப்போது, பிளந்து கட்டுகிறார். தற்போது, ஒரே நேரத்தில், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான, சல்மான், ஷாரூக், அமீர் கானுடன் தனித் தனி படங்களில் நடித்து வருகிறார், கத்ரீனா.

இதுபற்றி அவரிடம் கேட்டால், 'ரசிகர்களின் ஆசிர்வாதம் இருந்தால், எல்லாம் நடக்கும். ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களுடன் நடிப்பேன் என, நினைத்து கூட பார்த்ததில்லை. பொழுது போக்காக நடிக்க வந்த எனக்கு, இப்போது நடிப்பே தொழிலென மாறி விட்டது. அதை அர்ப்பணிப்பு உணர்வுடன் இப்போது செய்கிறேன்' என, உருக்கமாக பேசுகிறார், கத்ரீனா.

Post a Comment

Recent News

Recent Posts Widget